“ஏழு மாதங்கள் உடற்பயிற்சி” - ஆர்யாவின் அதிரடி மாற்றம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc


தனது உடற்பருமனை எப்படி குறைத்து இருக்கிறேன் என்பதை காட்டும் விதமாக நடிகர் ஆர்யா அவரது ட்விட்டர் பக்கத்தில் இரு புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.


Advertisement


ஆர்யாவின் 30வது படத்தை ப.ரஞ்சித் இயக்குகிறார். இந்த படத்தில் ஆர்யா ஒரு கிக் பாக்ஸராக நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஆர்யா கடுமையாக உடற்பயிற்சி செய்து உடம்பைக் கட்டுமஸ்தாக ஏற்றி வருகிறார். அது சம்பந்தமான புகைப்படங்களை ட்விட்டரில் ஆர்யா ஏற்கெனவே பதிவிட்டிருந்தார். மேலும் ஆர்யா, ஃபுல் அப்ஸ் எடுக்கும் அந்த வீடியோ பதிவில்,

image


Advertisement

‘நான் நேசிக்கும் விளையாட்டுத்துறை சார்ந்த ஒரு சினிமாவில் நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ப.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை வீரனாக நான் நடிக்கிறேன். இப்படம் என்னுடைய திரை வாழ்க்கையில் முக்கியமான திரைப்படமாக அமையும்’ என்று கூறி இருந்தார்.


Advertisement

இந்நிலையில் ஆர்யா அவரது ட்விட்டர் பக்கத்தில் இரு புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், “ஏழு மாதங்களாக கடினமான எக்சர்சைஸ் மற்றும் பாக்சிங் பயிற்சிதான் இந்த மாற்றத்தை எனக்கு ஏற்படுத்தித் தந்தது. எனது பயிற்சியாளர்கள் இல்லாமல் இது சாத்தியமில்லை” எனக் கூறியுள்ளார். அவர் பகிர்ந்துள்ள படத்தில் முதல் படத்தில் மிகுந்த உடற் பருமனுடன் காணப்படுகிறார். ஆனால் அடுத்த படத்தில் உடம்பைக் கட்டுக்கோப்பாக மாற்றி இருக்கிறார். இந்த மாற்றத்தை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

“அஜித் குமாருக்கு சமூக ஊடகத்தில் கணக்கு இல்லை” - வழக்கறிஞர் நோட்டீஸ்

ஏற்கெனவே ஆர்யா வெளியிட்ட பதிவில், ‘நீங்கள் வலுவாக இருப்பது வரை நீங்கள் எவ்வளவு வலிமையானவர் என்று உங்களுக்குத் தெரியாது’ எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement