[X] Close >

குடிபோதையில் தகராறு : தலையில் கல்லைப் போட்டு வழக்கறிஞர் கொலை

Advocate-murdered-in-Chennai-by-Friends

சென்னை பள்ளிகரணையில் வழக்கறிஞர் ஒருவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

சென்னை பள்ளிகரணை அடுத்த மாம்பாக்கம் பிரதான சாலையில் தனியார் திருமண மண்டபம் அருகே காலி இடத்தில் ஒருவர் இறந்துக் கிடப்பதாக பள்ளிகரணை போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.

image


Advertisement

தகவலின் பேரில் விரைந்து வந்த பள்ளிகரணை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசுப் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இறந்த நபரின் பெயர் ராகவ் (27) என்பதும், அவர் வழக்கறிஞர் என்பதும் தெரியவந்தது.

image

அவரை தலையில் கல்லால் தாக்கியது போல் காயங்கள் இருப்பதும், அங்கிருக்கும் சுவரில் ரத்தம் சிதறி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய பள்ளிகரணை போலீசார் கரிகாலன் மற்றும் ரமணன் ஆகியோரை கைது செய்தனர். குடிபோதையில் ஏற்பட்ட தகராறின் காரணமாக ராகவின் தலையில் அவர்கள் கல்லைத் தூக்கி தலையில் போட்டு கொலை செய்துள்ளனர். இதனை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.


Advertisement

காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேர் சஸ்பெண்ட் !

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close