நிர்பயா வழக்கு: குற்றவாளிகள் 4 பேருக்கும் மார்ச் 20 இல் தூக்கு !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் மார்ச் 20 ஆம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் இன்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


Advertisement

image

டெல்லியைச் சேர்ந்த மருத்துவ ‌மாணவி ஓடும் பேரு‌ந்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, ‌வி‌னய் கு‌மார் சர்மா, அ‌க்ஷய் குமார் ‌ஆகியோருக்கு தூக்குத் ‌தண்டனை விதிக்கப்பட்டது. இதில், பவன்குப்தா தவிர மற்ற மூவரும் தாக்கல் செய்‌‌த, கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிரா‌கரித்தார்.


Advertisement

நிர்பயா வழக்கு பவன் குமார் கருணை மனு : தள்ளுபடி செய்தார் குடியரசுத் தலைவர் 

image

இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை பவன்கு மார் குப்தா தாக்கல் செய்‌த‌ கருணை மனு‌வையும் குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார். கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டாலும், நால்‌வரை தூக்கி‌லிடுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. குடியரசுத் தலைவர் தங்களது கருணை மனுக்களை நிராக‌ரித்ததை எதிர்த்து, முகேஷ் குமார் சிங், வினய் குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்ற‌ம் ஏற்கெனவே நிராகரித்துவிட்டது.


Advertisement

image

நிர்பயா குற்றவாளிகள் தூக்கு நிறுத்தி வைப்பு ! 

இந்நிலையில் நால்வரின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்திருந்த டெல்லி நீதிமன்றம, நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேரையும் மார்ச் 20 ஆம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கிலிட உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த நிர்பயாவின் தாய் ஆஷா தேவி "தூக்கிலடப்படும் தேதி இதுவே இறுதியும் கடைசியாக இருக்கும் என நம்புகிறேன். இது போன்ற குற்றங்கள் இனியும் நடக்காமல் இருக்க இந்த தண்டனையே கடைசியாக இருக்கட்டும்" என்றார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement