விவசாயி தற்கொலை: ‘முதலமைச்சர் வராமல் உடல் அடக்கம் செய்யக்கூடாது’

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 


Advertisement

மகாராஷ்டிராவில் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யக்கோரி விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நிலையில், முதலமைச்சர் வந்து பார்க்காமல் தன்னுடைய உடலை அடக்கம் செய்யக்கூடாது என அவர் உருக்கமான கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

மகாராஷ்டிராவின் சோலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தரகாந்த் யாதவ். தனியார் வங்கியில் கடன் பெற்று அதனை அடைக்க முடியாமல் தவித்து வந்த அவர், இதர விவசாயிகளுடன் இணைந்து விவசாய கடன்களை அரசு ரத்து செய்ய வேண்டும் என போராடி வந்தார். 60 ஆயிரம் ரூபாய் கடன் பாக்கியிருந்த நிலையில், கடும் மனஉளைச்சலால் பாதிக்கப்பட்டிருந்த யாதவ், விவசாய கடன்களை அரசு ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துக்கொண்டார். அவரின் சட்டை பையிலிருந்த கடிதத்தை போலீசார் ஆய்வு செய்ததில், கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்வதாகவும், தனது கோரிக்கையான அனைத்து விவசாயிகளின் கடன்களை அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும், முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் தன் உடலை பார்க்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். மேலும், முதல்வர் வந்து பார்க்கும் வரை தன்னை அடக்கம் செய்ய வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து யாதவின் உறவினர்கள் உடலை அடக்கம் செய்யாமல் காத்துக்கொண்டிருக்கின்றனர். முதல்வர் வரவில்லை என்றாலும் மற்ற அமைச்சர் யாராவது அவரின் சார்பாக வரும் வரை உடலை அடக்கம் செய்ய மாட்டோம் என்று யாதவின் உறவினர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement