போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களின் பணியிட மாற்ற உத்தரவு ரத்து

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களின் பணியிட மாற்ற உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து போராட்டம்
திரும்ப பெறப்பட்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு சார்ஜ் மெமோ எனும் குற்றச்சாட்டு குறிப்பாணையும், சிலருக்கு பணிமாறுதல் உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன.

image


Advertisement

குடியாத்தம் தொகுதி திமுக எம்.எல்.ஏ காத்தவராயன் காலமானார் 

இதனை எதிர்த்து சென்னையை சேர்ந்த அரசு மருத்துவர் பாலசுப்ரமணியம் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களின் பணியிட மாற்ற உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

loading...

Advertisement

Advertisement

Advertisement