புதரிலிருந்து ‘மனிதக் கை’யைக் கவ்விக் கொண்டு வந்த நாய்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சேலத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவரின் சடலத்தைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement

சேலம் செட்டிசாவடி அருகே உள்ள பசுவகல் பகுதியில் சுற்றித் திரிந்த நாய் ஒன்று, அழுகிய நிலையிலிருந்த மனித கையைக் கவ்விச் சென்றது. அவ்வழியே சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததுடன், அந்த நாயை விரட்டிச் சென்றுள்ளனர். உடனே அந்த நாய் கையை கீழே போட்டு விட்டு ஓடியது. பின்னர் அருகிலுள்ள புதருக்குள் சென்று மற்றொரு கையை கவ்வி வந்துள்ளது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கன்னங்குறிச்சி காவல்நிலையத்திற்குப் புகார் தெரிவித்தனர்.

image


Advertisement

புகாரின் பேரில் விரைந்து வந்த போலீசார் முட்புதரிலிருந்து 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தினை அழுகிய நிலையில் கைப்பற்றினர். பின்னர் சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு புதருக்குள் வீசிச் செல்லப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தியாவின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு : சிறப்பம்சங்கள் என்னென்ன ?

image

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், கொலை செய்யப்பட்டது யார் ? கொலை செய்தது யார் ? என விசாரித்து வருகின்றனர். வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு புதருக்குள் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement