மாமல்லபுரத்தின் சுற்றுலா தரத்தை மேம்படுத்த 563 கோடி மத்திய அரசிடம் இருந்து கேட்டுப் பெறப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழகம் சுற்றுலாத்தலங்கள் நிறைந்த மாநிலம். கோயில்கள் நிறைந்த பூமி. ஆகவே வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு அதிகமானவர்கள் சுற்றுலா வருகின்றனர். மத ரீதியான யாத்திரைகளும் இதில் அடங்கும். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சீன அதிபர் ஷி ஜின்பிங் மாமல்லபுரம் வருகை தந்தார். வரலாற்று முக்கியத்துவம் கொண்ட மாமல்லபுரத்தில் இச்சந்திப்பு நடந்ததால் உலகமே இந்த ஊரை உற்றுப் பார்த்தது. பிரதமர் மோடியும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் இங்கு சந்தித்துக் கொண்டதால் உலக அளவில் தமிழர்களின் நாகரிகம் மிகவும் பிரபலம் அடைந்தது.
இந்நிலைதான் தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். இந்த ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டின்படி சுற்றுலாவுக்காக 90.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சீன அதிபரின் வருகையை அடுத்து மாமல்லபுரத்தின் சுற்றுலா மேம்பாட்டிற்கு ஊக்கமளிப்பதற்கான சிறப்பு தொகுப்புத் திட்டம் ஒன்றும் 563.50 கோடி மொத்த செலவு மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசு சுற்றுலா மேம்பாட்டிற்காக நிதியை அளிக்கும் என உறுதி அளித்துள்ளதால் இதற்கான நிதியை மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெறும் என நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையின் போது தெரிவித்துள்ளார்.
Loading More post
“சசிகலாவுக்காக அமமுக தலைவர் பதவி காலியாக உள்ளது” - டிடிவி தினகரன்
தமிழகத்தில் பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்.... மாவட்ட வாரியான கள நிலவரம்
அரசு பஸ் டிரைக் தொடரும்: தொழிற்சங்கங்கள்
ராகுலிடம் பொய் சொல்லி ஏமாற்றியவர் நாராயணசாமி -பிரதமர் மோடி
மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றிய பிரதமர் மோடி..
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
"இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கல!" - நிச்சயதார்த்த மோதிரத்தில் திருக்குறள்
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை