’மாஸ்டர்’ படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுதான்?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்சேதுபதி என்ன கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது.


Advertisement

image

நடிகர் விஜய் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும், ஹீரோயினாக மாளவிகா மோகனும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக ஆண்ட்ரியா, கைதி படத்தின் வில்லன் அர்ஜுன் தாஸ், சாந்தனு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதுவரை மூன்று போஸ்டர்களை இப்படக்குழு வெளியிட்டுள்ளது.


Advertisement

‘மாஸ்டர்’ படத்தில் விஜய், கல்லூரி பேராசிரியராக நடித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் விஜய்சேதுபதி என்ன பாத்திரத்தில் நடித்து வருகிறார் என்ற விவரம் வெளியாகவில்லை. அவர் எதிர்மறையான வேடத்தில் நடிக்கிறார் என்பது மட்டும் தெரியவந்தது. அதனை படத்தின் மூன்றாவது போஸ்டரும் உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தது. இந்நிலையில் விஜய்சேதுபதி இப்படத்தில் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஜேம்ஸ் துரைராஜ் என்ற பாத்திரத்தில் விஜய்சேதுபதி நடித்து வருவதாக தகவல் கசிந்துள்ளது.

Image

ஆனால் இந்தத் தகவலை 'மாஸ்டர்' படக்குழுவோ அல்லது விஜய் சேதுபதியோ அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை. இந்தப் படத்தில் விஜய்க்கு இணையாக விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கு உள்ளாகவே படத்தின் 70% விற்பனை முடிந்துவிட்டதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement