JUST IN
  • BREAKING-NEWS ‌சிஏஏவுக்கு எதிராக சென்னையில் பேரணி நடத்திய இஸ்லாமிய அமைப்பு தலைவர்கள் உள்ளிட்ட 20ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ‌இந்தியன் 2, படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS ‌திருப்பூர், சேலம் மாவட்டங்களில் நடைபெற்ற இருவேறு சாலை‌ விபத்துகளில் 25 பேர் பலி

TopNews | பரவும் கொரனோ வைரஸ்; கடைசி ஒருநாள் போட்டி... இன்னும் சில முக்கியச் செய்திகள்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகம் முழுவதும் இன்று போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம். ஐந்து வயதுக்குட்பட்ட 70 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க ஏற்பாடு

சீனாவில் கொரனோ வைரஸ் பரவி வருவதால் தமிழகம் வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை. நோய்தொற்று பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

மகாராஷ்டிராவில் உள்ள பிரசித்தி பெற்ற ஷீரடி சாய்பாபா கோயில் மூடப்படாது. காலவரையின்றி மூடப்படும் என வெளியான தகவல் வெறும் வதந்தி என கோயில் நிர்வாகம் விளக்கம்

திமுகவுடனான கூட்டணியில் விரிசல் இல்லை என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உறுதி. கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசுவதை இரு கட்சியினரும் தவிர்க்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

image

திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைந்த கண்ணாடி போன்றது - அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த முடியாது என மாநில அரசுகள் கூறுவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் அதிரடி கருத்து

உதவி ஆய்வாளர் வில்சன் கொலை தொடர்பாக கைதாகியுள்ள மெஹபூப் பாஷா, 17பேருக்கு பயங்கரவாத பயிற்சி அளித்ததாக குற்றச்சாட்டு. 11பேர் கைதாகியுள்ள நிலையில் மற்றவர்களையும் தேடுகிறது காவல்துறை

பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது இதுவரை 7 மாவட்ட காவல்நிலையங்களில் புகார். நடவடிக்கை கோரி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சென்னை, ஈரோடு , மயிலாடுதுறை காவல்நிலையங்களில் மனு

image

இலங்கை ராணுவத்திற்கான ஆயுத கொள்முதலுக்கு இந்தியா சார்பில் 50 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி வழங்கப்படும். அதிபர் கோட்டாபய ராஜபக்சவை சந்தித்தபின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அறிவிப்பு

ஒரு நாள் போட்டித்தொடரை வெல்லப்போவது யார்? 3ஆவது மற்றும் கடைசிப் போட்டியில் இன்று இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை.

Advertisement: