JUST IN
  • BREAKING-NEWS ‌டெல்லி கலவரம் குறித்து கவலை தெரிவித்தது ஐநா மனித உரிமைகள் ஆணையம்
  • BREAKING-NEWS ‌டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட ஆணையிட வேண்டி சிறைத்துறை மனுத்தாக்கல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளான 4 பேருக்கு தூக்கிலிடும் ஆணையை பிறப்பிக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்திற்கு திகார் சிறைத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் வரும் 22 ஆம் தேதி தூக்கில் இடுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி டெல்லி நீதிமன்றத்தில் முகே‌‌ஷ் குமார் சிங் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

Image result for நிர்பயா கருணை மனு

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ‘கருணை மனு பரிசீலனையில் இருக்கும்போது, தண்டனை நிறைவேற்றப்படாது. அந்த வகையில் 22-ந்தேதி தூக்குத் தண்டனையை நிறைவேற்றமாட்டோம் என்ற அறிக்கையை சிறை அதிகாரிகள் எனக்கு வழங்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இதனிடையே தனது தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி 4 குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் கருணை மனு ஒன்றை ஆளுநருக்கு அனுப்பி இருந்தார். அந்தக் கருணை மனுவை உள்துறை அமைச்சகத்தின் கோரிக்கையை ஏற்று, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நிராகரித்தார்.

இந்நிலையில், திகார் சிறைத்துறை நிர்வாகம் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், நிர்பயா வழக்கில் குற்றவாளிகளான 4 பேருக்கு தூக்கிலிடும் ஆணையை பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

 

Advertisement: