பரவிய வதந்தி.. புகைப்படம் வெளியிட்டு பதில் சொன்ன விக்னேஷ் சிவன்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தங்களை பற்றி வெளியான வதந்திகளை பொய்யாக்கும் விதத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் அவரது இன்ஸ்டா பக்கத்தில் நயன்தாராவுடன் செல்ஃபியை பதிவிட்டுள்ளார்.


Advertisement

நடிகை நயன்தாரா இல்லாமல் சில வருடங்களாக இயக்குநர் விக்னேஷ் சிவன் எந்த விழாக்களுக்கும் செல்வதில்லை. ஆனால் சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் நயன்தாரா கலந்து கொண்டார். அவருடன் விக்னேஷ் சிவன் வரவில்லை. ஆகவே அந்த விழாவில் கலந்து கொண்ட அனைவரும் விக்னேஷ் சிவன் எங்கே என முனுமுனுக்கத் தொடங்கினர்.


Advertisement

மேலும் நயன்தாராவின் புத்தாண்டு கொண்டாட்ட படங்களிலிலும் இவரைக் காணவில்லை. ஆகவே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் முடிந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. உடனே திரை ரசிகர்களும் இந்த ஜோடி பிரிந்துவிட்டதாகவும் நினைக்கத் தொடங்கினர்.

இந்நிலையில் அனைத்து வதந்திகளையும் பொய்யாக்கும்படி இயக்குநர் விக்னேஷ் சிவன் அவரது இன்ஸ்டா பக்கத்தில் நயன்தாராவுடன் ஒரு செல்ஃபி எடுத்து பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் நயன் புடவையில் உள்ளார். சிகப்பு நிற டி ஷர்ட்டில் விக்னேஷ் உள்ளார். இந்தப் படம் அவர்களைப் பற்றி பரவிய பல ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. நயன்தாரா, ‘நானும் ரவுடி தான்’ படத்தில் நடித்ததன் மூலம் விக்னேஷ் சிவனுடன் காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அந்தப் படத்தை இவர்தான் இயக்கி இருந்தார். நயனுக்கு ஜோடியாக விஜய்சேதுபதி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement