புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏதேனும் போராட்டத்தில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரித்துள்ளது.
2020ஆம் ஆண்டு இன்று நள்ளிரவு பிறக்கிறது. இதையொட்டி இன்று நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறவிருப்பதால், சென்னையில் 15 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது. மக்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னையில் உள்ள நட்சத்திர மற்றும் கேளிக்கை விடுதிகளுக்கு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது போராட்டம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதாகவும், விதிகளை மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னை மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் கண்காணிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
“30 தொகுதியில் வெற்றி, இல்லையேல் மேடையிலேயே தற்கொலை” திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் ஆவேச பேச்சு
பருவம் தாண்டி ஓயாமல் கொட்டிய கனமழை: நீரில் மூழ்கிய பயிர்களால் கண்ணீர் கடலில் விவசாயிகள்!
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்