2020 ஸ்பெஷல் : ‘வாட்ஸ் அப்’ புதிய வசதிகள்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

2020-ஆம் ஆண்டு முதல் பல்வேறு புதிய அப்டேட்ஸ்களை வாட்ஸ் அப் நிறுவனம் கொண்டு வருகிறது.


Advertisement

ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப் செயலியை வாங்கியது முதல் பல்வேறு அப்டேட்ஸ்களை பயன்பாட்டாளர்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் பீட்டா பயன்பாட்டாளர்கள் மூலம் பரிசோதிக்கப்பட்ட சில புதிய வசதிகளை 2020-ஆம் ஆண்டு முதல் வாட்ஸ் அப் நிறுவனம் அனைத்து பயன்பாட்டாளர்களுக்கும் கொண்டுவருகிறது. அதன்படி, டார்க் மோட், ஃபேஸ் அன்லாக், டெலிடெட் மெசெஜ் உள்ளிட்ட புதிய வசதிகள் வரவுள்ளன.

image


Advertisement

டார்க் மோட் : வாட்ஸ் அப்பின் செட்டிங்க்ஸ் மெனுவில் சென்றால், டார்க் மோட் என ஒரு ஆப்ஷன் இருக்கும். அதை செலக்ட் செய்தால், கம்ப்யூட்டரில் வருவதுபோல சிஸ்டம்-வொயிடு டார்க் மோட் வரும்.

ஃபேஸ் அன்லாக் : ஸ்மார்ட்போன்களில் செல்ஃபி மூலம் முகத்தை படம் பிடித்து, அதன்மூலம் போனை அன்லாக் செய்து கொள்ளும் முறை.

மல்டிபுள் டிவைஸ் சப்போர்ட் : தற்போது ஒரு ஸ்மார்ட்போனில், ஒரு வாட்ஸ் அப் ஐடியை பயன்படுத்த முடியும். இந்த முறையின் மூலம் ஒரு வாட்ஸ் அப் ஐடியை ஒன்றுக்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த முடியும்.


Advertisement

image

டெலிட் மெசெஜ் : எந்த ஒரு மெசெஜையும் டெலிட் செய்த பின்னர் அதனை இந்த ஆப்ஷனை பயன்படுத்தி மீண்டும் கொண்டுவர முடியும்.

லாஸ்ட் சீன் : தற்போது அனைவருக்கும் அல்லது தங்களுக்கு மட்டும் கடைசியாக வாட்ஸ் அப்பிற்கு எப்போது வந்தோம் என்பதை காணும் வசதியை செட் செய்ய முடியும். ஆனால் இந்த புதிய முறையின் மூலம் குறிப்பிட நண்பர்களுக்கு கடைசியாக வாட்ஸ் அப்பிற்கு எப்போது வந்தோம் என்பதை செட் செய்யலாம். இதுபோன்ற மேலும் சில வசதிகளும் 2020ஆம் ஆண்டு முதல் வாட்ஸ் அப்பில் வரவுள்ளது.

‘உங்கள் புகைப்படம் மீமாக மாறுகிறது’ - கிண்டலுக்கு பதிலளித்த மோடி..!

loading...

Advertisement

Advertisement

Advertisement