பாஜகவில் சேர்ந்ததாக வெளியான தகவல் உண்மையில்லை - முன்னாள் நீதிபதி ஜெய்சந்திரன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தான் பாஜகவில் சேர்ந்ததாக வெளியான தகவல் உண்மையில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ம.ஜெய்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.


Advertisement

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில், ''நான் பாஜகவில் இணைந்துவிட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை; சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஜூலை 6ல் நடந்த பாஜக கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத்தை சந்தித்து சட்டம் சார்ந்த சில முக்கிய பிரச்னைகள் குறித்து பேசவதற்காக மட்டுமே சென்றிருந்தேன்.


Advertisement

 

அப்போது கட்சியினரின் கூட்டம் அதிகமாக இருந்தது. அதனால் தனிப்பட்ட சந்திப்புக்கு எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. அதனால் ரவிஷங்கர் பிரசாத் வரும் வரை என்னை மேடையில் காத்திருக்கச் சொன்னார்கள். மத்திய அமைச்சர் வந்தவுடன் கூட்டம் தொடங்கியது. அவர் தாமதமாக வந்ததால், திட்டமிட்டபடி அவருடனான சந்திப்புக்கு நேரமில்லாமல் போனது. கூட்டத்தில் மத்திய அமைச்சர் உரையாற்றிய பின் பாஜகவின் உறுப்பினராக சேரும்படி என்னை அப்போதே அக்கட்சியினர் அழைத்தார்கள். அது எனக்கு
ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால், நான் சட்டம் தொடர்பாக சில தகவல்களை ஆலோசிப்பதற்காகவே அங்கு சென்றேனே தவிர பாஜகவில் இணைவதற்காக அல்ல. எனது எண்ணமும் ஒருபோதும் அதுகிடையாது. ஒருவேளை எனது பெயர் உறுப்பினர் பட்டியலில் இருந்தால் அதனை நீக்கும்படி பாஜக பொறுப்பாளர்களை கேட்டுக்கொள்கிறேன் '' என தெரிவித்துள்ளார்

loading...

Advertisement

Advertisement

Advertisement