வயலில் மின்சாரம் தாக்கி அடுத்தடுத்து 3 பேர் உயிரிழப்பு - நில உரிமையாளர் மீது புகார்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உதகை அருகே விவசாய நிலத்தில் மின் மோட்டார் ஒயர் அருந்து மூன்று பேர் அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரத்தில் நில உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கூறி உறவினர்கள் உடல்களை வாங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


Advertisement

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள அத்திக்கல் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் நேற்று பணிகளை முடித்துவிட்டு பாலன், குமார், மணியம்மா ஆகிய மூன்று பேரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டாரில் இருந்த மின் கம்பி அறுந்து கம்பிவேலியில் விழுந்துள்ளது. இதை கவனிக்காமல் கம்பியை பிடித்த பாலன், குமார், மணியம்மா ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.


Advertisement

இதுகுறித்து, இந்த ஊர் மக்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை கைப்பற்றி உதகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில் மூன்று பேரின் உடல்கள் இன்று பிரேத பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் உயிரிழப்புக்கு காரணமான நில உரிமையாளர் சந்திரன் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடல்களை வாங்குவதில்லை எனக் கூறி அரசு மருத்துவமனையில் உறவினர்கள் காத்திருப்பு  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து
சென்றனர். 
 

loading...

Advertisement

Advertisement

Advertisement