14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து ஸ்நாப்சாட்டில் பதிவு செய்த சிறுவர்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் சிறுவர்கள் கலந்துகொண்ட பிரைவேட் பார்ட்டியில் 14 வயது சிறுமியை 16 வயது சிறுவர்கள் இருவர் பாலியல் பலாத்காரம் செய்து ஸ்நாப்சாட் எனப்படும் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளனர்.


Advertisement

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் 16 வயது சிறுவர்கள் இருவர் ஹோம் பார்ட்டி என்று அழைக்கப்படும் பிரைவேட் பார்ட்டியை ஏற்பாடு செய்துள்ளனர். இது முழுக்க முழுக்க சிறுவர்கள் கலந்துகொள்ளும் போட்டியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பார்ட்டியில் கலந்துகொண்ட சிறுவர்கள் விஸ்கி, வோட்கா என பலவகையான மதுபானங்களை அளவுக்கு அதிகமாக அருந்தியுள்ளனர். அப்போது மயக்கமடைந்த ஒரு 14 வயது சிறுமியை அந்த இரு சிறுவர்களும் தனி அறைக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மயக்கம் தெளிந்து எழுந்த சிறுமி, ஆடையில்லாமல் கிடந்துள்ளார். அவருடைய காலணிகளில் ரத்தம் கசிந்து இருந்திருக்கிறது. கடுமையான வயிற்று வலியும் ஏற்பட்டுள்ளது. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவர்கள் இருவரும் அவர்கள் செய்த காரியத்தை படம் எடுத்து ஸ்நாப்சாட் எனப்படும் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளனர்.

ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி நடந்த இந்த சம்பவம், ஆன்லைனில் பதிவேற்றப்பட்ட இந்த புகைப்படங்கள் மூலம் இப்போதுதான் தெரியவந்துள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் இருவரையும் வாஷிங்டன் நகர போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement