JUST IN

Advertisement

அதிமுக பொதுக்குழு கூட்டம்: விவாதிக்கப்பட உள்ள விஷயங்கள் என்ன? 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இன்று காலை நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுக்கூட்டத்தில் என்ன விஷயங்கள் விவாதிக்க உள்ளன என்பது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தெரிவித்துள்ளார்.


Advertisement


வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.  அதிமுக பொதுக்குழு கூட்டம் அரசியல் களத்தில் எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் பொதுக்குழு கூட்டம் என்றாலே அதிமுக தொண்டர்களுக்கு உற்சாகம்தான். அந்தளவிற்கு, முக்கிய அறிவிப்புகள், தீர்மானங்கள் என அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிச்சயம் இடம்பெறும். அவை தமிழ்நாட்டு அரசியல் களத்தில் விவாதங்களையும் ஏற்படுத்தும்.

 


Advertisement

ஜெயல‌லிதா மறைவுக்குப் பின், அதிமுக ஆட்சி நீடிக்காது என எதிர்கட்சியினர் பேசிவந்த நிலையில், ஆட்சியை தக்க வைத்துகொண்டதுடன், நடந்த முடிந்த இடைத்தேர்தலிலும் வெற்றிபெற்றுள்ளது ஓபிஎஸ் - ஈபிஎஸ் தலைமையிலான அதிமு‌க. இந்தநிலையில் இன்று நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக அடுத்து சந்திக்கவுள்ள தேர்தல்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்தக் கூட்டம் குறித்து கோகுல அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, சென்னை வானகரத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் 2 ஆயிரத்து 400 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிமுக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு‌ செல்வது, அடுத்தடுத்து தேர்தல்கள் நடைபெறும் நிலையில் வார்டு, சட்டமன்ற வாரியாக கட்சியை வலுப்படுத்துவது குறித்தும் இதில் விவாதிக்கப்படலாம் என்று  தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலில், கட்சி சார்ந்த அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரத்தை ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது. முதலமைச்சர் மற்றும் துணைமுதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களை வாழ்த்தி தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீன அதிபர் வருகை, நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது என மூத்த பத்திரிகையாளர் துரை கருணா கூறியுள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement