“மிசா குறித்து திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுகிறது”- மு.க.ஸ்டாலின்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கோவையில் கொடிக்கம்பம் விழுந்து லாரி மோதி கால் இழந்த பெண்ணுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்


Advertisement

கோவையில் கொடிக்கம்பம் விழுந்து லாரி மோதி கால் இழந்த பெண்ணுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். மேலும் திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவியும் வழங்கினார். ஆறுதல் கூறியபின் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். அதில், கோவையில் அதிமுக கொடிக்கம்பம் விழுந்து பெண் கால் இழந்த நிலையில் அதை வைத்தவர்கள் மீது நடவடிக்கை இல்லை; லாரி ஓட்டுநர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். மிசா தொடர்பாக சில நாட்களாக திட்டமிட்டு வதந்தி பரப்பப்பட்டு வருகிறது என தெரிவித்தார். 


Advertisement

பின்னர் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், ''அதிமுக கொடிக் கம்பம் சரிந்ததால் விபத்துக்குள்ளாகி, கால்கள் அகற்றப்பட்டுள்ள அனுராதாவுக்கு ஆறுதல் கூறினேன். திமுக சார்பில் நிதியுதவி வழங்கி, அவருக்கு செயற்கைக் கால் பொருத்தவும் உதவி செய்யப்படும் என உறுதியளித்தேன். அதிமுக சார்பில் ஆறுதல் கூட இல்லை; இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் கூடாது'' என குறிப்பிட்டுள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement