சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணத்தில் மர்மங்கள் இருப்பதை அவரின் பெற்றோர்கள் கேள்விகளால் உணர்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடியில் தற்கொலை செய்துகொண்ட மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் இன்று சென்னை டிஜிபி-யை சந்தித்து கோரிக்கை வைத்தார். அதைத்தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து தனது மகளின் மரணம் தொடர்பாக விசாரிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இதைத்தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார். இச்சந்திப்பு தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், “சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தற்கொலை அல்ல; அதில் பல மர்மங்கள் அடங்கி இருப்பதை அவரது பெற்றோர் எழுப்பும் கேள்விகள் உணர்த்துகிறது! அவர்களின் கண்ணீருக்கு நீதி கிடைக்க வேண்டும்! குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்வதன் மூலமாக நியாத்தின் பக்கம் நிற்பதை தமிழக அரசு நிரூபிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தற்கொலை அல்ல; அதில் பல மர்மங்கள் அடங்கி இருப்பதை அவரது பெற்றோர் எழுப்பும் கேள்விகள் உணர்த்துகிறது! அவர்களின் கண்ணீருக்கு நீதி கிடைக்க வேண்டும்!
குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்வதன் மூலமாக நியாயத்தின் பக்கம் நிற்பதை தமிழக அரசு நிரூபிக்க வேண்டும். pic.twitter.com/Fc39OUy2Mr— M.K.Stalin (@mkstalin) November 15, 2019Advertisement
Loading More post
ஏப்ரல் 9ம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடக்கம்?
திருச்சியில் இன்று திமுக பொதுக்கூட்டம்; தொலைநோக்கு திட்டங்களை அறிவிக்கிறார் மு.க.ஸ்டாலின்
நாகர்கோவிலில் இன்று அமித் ஷா பரப்புரை!
தொகுதி பங்கீட்டில் திமுக-காங்கிரஸ் இடையே சுமூக உடன்பாடு; இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
அனல்பறக்கும் மேற்கு வங்க தேர்தல் களம்.. பிரதமர் மோடி இன்று பிரசாரம்.!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!