ஜெயலலிதா திரைப்படம்: 3 இயக்குநர்களுக்கு நோட்டீஸ்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள், வெப் சீரிஸ்களுக்கு தடை கோரி ஜெ.தீபா தொடர்ந்த வழக்கில், 3 இயக்குநர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.


Advertisement

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில், கங்கனா ரனா‌வத் நடிக்கும்‌ 'தலைவி' என்ற தமிழ் திரைப்படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். இதை விஷ்ணுவர்தன் இந்தூரி தயாரிக்கிறார். நித்யா மேனன் நடிப்பில் ’த அயர்ன் லேடி’ என்ற படமும் உருவாகிறது. ரம்யா கிருஷ்ணன் நடிப்பில், குயின் என்ற இணையதள தொடர் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தயாராகி வருகிறது. 


Advertisement

இந் நிலையில், தன் அனுமதியில்லாமல் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையை தயாரிக்கவோ, விளம்பரப்‌படுத்தவோ, திரையிடவோ கூடாது என உத்தரவிடக் கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்தவற்றின் விவரங்கள் தனக்குத் தெரியும் என்பதாலும், கதையில் தங்களது குடும்ப விஷயங்களை பாதிக்கும் வகையில் காட்சிகள் சித்திரிக்கப்படலாம் என்றும் தீபா அச்‌சம் தெரிவித்திருந்தார்.

ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கு பாதிப்பில்லாமல் திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா என்பதை சரிபார்க்க வேண்டிய அவசியம் இருப்பதால், அந்த திரைப்படங்களுக்கு தடை விதிக்கவும் ஜெ.தீபா கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.கல்யாணசுந்தரம், இயக்குநர்கள் ஏ.எல்.விஜய், தயாரிப்பாளர் விஷ்ணுவர்தன் இந்தூரி, இயக்குநர் கவுதம் மேனன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். வழக்கு வரும் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement