மறுமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்திய அம்மாவை, இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற மகள் கைது செய்யப்பட்டார்.
டெல்லியில் உள்ள ஹரிநகரைச் சேர்ந்தவர் நீரு பஹா (47). மின்சார வாரியத்தில் உதவி தனி அதிகாரியாக பணியாற்றி வந்தார். கணவரைப் பிரிந்த இவர், தனது அம்மா சந்தோஷ் பஹாவுடன் வசித்து வந்தார். கணவரை பிரிந்ததால் அம்மா, நீருவை குறை கூறிகொண்டே இருந்தாராம். அவதூறாகவும் பேசினாராம். இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை வரும். பின்னர் வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்ளும்படியும் அம்மா கூறியிருக்கிறார். மறுத்து வந்தார், நீரு. இதனாலும் இருவருக்கும் தினமும் பிரச்னை.
கடந்த சனிக்கிழமையும் இதே போல சண்டை நடந்திருக்கிறது. ஆத்திரமடைந்த நீரு, வீட்டில் கிடந்த இரும்புக் கம்பியால் அம்மாவைத் தாக்கியுள்ளார். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். பின்னர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் நீரு.
தகவல் கிடைத்து வீட்டுக்குச் சென்ற போலீசார், சந்தோஷியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் நீருவை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அம்மாவைக் கொன்றதை அவர், ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Loading More post
டெல்லி: ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் 24 மணிநேரத்தில் 25 நோயாளிகள் பலி; அபாயத்தில் 60 பேர்
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாமா? - கருத்துக்கேட்பில் வாக்குவாதம்
"கொரோனா 2-ஆம் அலையில் நுரையீரல் பாதிப்புகள் முன்கூட்டியே தொடக்கம்"- மருத்துவர்கள்
தமிழகத்தில் வசிக்கும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை
இந்தியா மற்றும் பாகிஸ்தான் பயணிகள் விமானங்களுக்கு தடை விதித்தது கனடா
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை