தாஜ்மஹால் அருகே 9 அடி மலைப்பாம்பு - அதிர்ச்சி அடைந்த சுற்றுலாப் பயணிகள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தாஜ்மஹால் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் 9 அடி நீள மலைப்பாம்பு ஒன்று இருந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


Advertisement

ஆக்ரா நகரில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுப்பயணிகள் வந்து செல்கிறனர். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் வருகின்றனர்.

இந்நிலையில், தாஜ்மஹால் அருகே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று கிடந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்தனர். பாம்பு இருப்பதை முதலில் கட்டுமான தொழிலாளர்கள் பார்த்துள்ளனர்.


Advertisement

                

தாங்கள் மிதிக்கும் தூரத்தில் பாம்பு இருந்ததாகவும், பார்த்த உடனே பின்னே சென்றுவிட்டதாகவும் அவர்கள் கூறினர். அவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மலைப்பாம்பை மீட்க வனத்துறை அதிகாரிகள் தாஜ்மஹால் பகுதிக்கு விரைந்துள்ளனர். அவர்கள் வருவதற்குள் ஏராளமானோர் பாம்பைச் சுற்றி நின்றுகொண்டிருந்தனர். பின்னர், பாம்பை வனத்துறையினர் பிடித்துச் சென்றனர்.


Advertisement

         

ஆயிரக்கணக்கானோர் நாள்தோறும் வந்து செல்லும் தாஜ்மஹால் பகுதியில் 9 அடி நீளமுள்ள பாம்பு கிடந்துள்ளது சுற்றுலாப் பயணிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement