ரயில் நிலையம் அருகே இளைஞர் கொலை : முன்விரோதம் காரணமா?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருமுல்லைவாயில் ரயில் நிலையம் அருகே ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Advertisement

சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் மூன்று நகரில் வசித்து வந்தவர் சந்தோஷ் குமார்(33). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இன்று காலை வீட்டின் அருகே உள்ள பள்ளியில் தனது மகனை விட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பினார். 

அப்போது ரயில் நிலையம் அருகே சந்தோஷ் வந்தபோது 4 பேர் கொண்ட மர்ம கும்பல் சுற்றி வளைத்து சந்தோஷை வெட்டி சாய்த்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதையடுத்து சந்தோஷ் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதனை கண்ட பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.


Advertisement

தகவலறிந்து சென்ற காவல்துறையினர் அவரை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனையடுத்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சந்தோஷ் குமார் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement