ஹரியானா முதல்வராகப் பதவியேற்ற மனோகர் லாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஹரியானா முதல்வராக மீண்டும் பதவியேற்று உள்ள மனோகர் லால் கட்டாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 


Advertisement

ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 24ஆம் தேதி வெளியானது. இந்தத் தேர்தல் முடிவில் எந்தக் கட்சியும் தனிப் பெரும்பான்மையை பெறாததால், யார் ஆட்சி அமைக்க போகிறார்கள் என்ற இழுபறி நீடித்தது. இந்தச் சூழல் அதிக இடங்களில் வெற்றிப்பெற்று இருந்த பாஜக ஜனநாயக ஜனதா கட்சியுடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து நேற்று ஹரியானா ஆளுநரை சந்தித்த மனோகர் லால் கட்டார் ஆட்சியமைக்க உரிமை கோறினார். 


Advertisement

இந்நிலையில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மனோகர் லால் கட்டார் ஹரியானா முதல்வராகவும் ஜனநாயக ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலா துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர். இந்த விழாவில் பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

ஹரியானா மாநில முதலமைச்சராக பதவியேற்று உள்ள மனோகர் லால் கட்டார் மற்றும் துணை முதலமைச்சராக பதவியேற்று உள்ள துஷ்யந்த் சவுதாலா ஆகிய இருவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement