காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுர்ஜிவாலா தோல்வி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா தோல்வியை தழுவினார்.


Advertisement

ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில், பாஜக, காங்கிரஸ் இடையே இழுபறி நிலவி வருகிறது. பாஜக 36 இடங்களிலும், காங்கிரஸ் 33 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. இதனால், ஹரியானாவில் யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பதில் இழுபறி நிலவுகிறது.

இந்நிலையில், ஹரியானாவின் கைதல் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா தோல்வியை தழுவினார். பாஜகவின் லீலா ராமிடம் 567 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement