தீபாவளிக்கு முந்தைய நாள் பள்ளிகளுக்கு விடுமுறை - மாணவர்கள் மகிழ்ச்சி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தீபாவளிக்கு முந்தைய நாளான 26ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

தமிழக பள்ளிக் கல்வித் துறை கடந்தாண்டுவரை ஆண்டு முழுவதும் பள்ளி பணிநாட்களின் அட்டவணையை பள்ளிகளுக்கு அனுப்பி வந்தது. மழை, வெயில் உள்ளிட்ட காரணங்களால் திட்டமிடப்படாத விடுமுறைகள் அளிக்கப்படுவதால், பணி நாட்களை அதற்கேற்றார் போன்று அட்டவணைப்படுத்த ஒவ்வொரு மாதமும் பணி நாட்கள் அட்டவணை இந்தாண்டு முதல் அனுப்பப்படுகிறது. 

அப்படி அக்டோபர் மாதத்திற்கு அனுப்பப்பட்ட அட்டவணையில், திபாவளிப் பண்டிகை நாளான அக்டோபர் 27ஆம் தேதிக்கு முந்தைய நாள் பணி நாள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை பார்த்த பிறகுதான், பண்டிகையை மூன்று நாட்கள் கொண்டாட நினைத்த அனைவருக்கும் அதிர்ச்சியாகிவிட்டது. ஆயுத பூஜை, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்கும் தொடர் விடுமுறை விடவேண்டிய சூழல் இருப்பதால், பணி நாட்களை சரிசெய்ய இப்படி அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்தது.


Advertisement

                 

இந்நிலையில், தீபாவளிக்கு முந்தைய நாளான 26ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி கால அட்டவணைப்படி 26ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது புதிய அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement