நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, தனது தயாரிப்பான பெலினோ மாடல் கார்களின் விலையை ஒரு லட்சம் ரூபாய் குறைத்துள்ளது.
தொழில் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த கார்ப்ரேட் வரி என்றழைக்கப்படும் வருமானவரி 22 சதவீதமாக குறைக்கப்படுவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் அறிவித்தார். இதன் எதிரொலியாக பல பொருட்களில் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதன் எதிரொலியாக சில தினங்களுக்கு முன்பு கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, சில மாடல் கார்களின் விலையை 5 ஆயிரம் ரூபாய் குறைப்பதாக அறிவித்தது.
இது குறித்து தெரிவித்த மாருதி சுசுகி நிறுவனம் MARUTI ALTO 800, ALTO K10, SWIFT DIESEL, CELERIO, BALENO DIESEL உள்ளிட்ட மாடல் கார்களின் ஷோரூம் விலை 5 ஆயிரம் ரூபாய் குறைக்கப்படுவதாக தெரிவித்தது. இந்நிலையில் மாருதி சுசூகி, தனது தயாரிப்பான பெலினோ மாடல் கார்களின் விலையை ஒரு லட்சம் ரூபாய் குறைத்துள்ளது.
இந்த லட்ச ரூபாய் விலைக்குறைப்பானது வாகன விற்பனை துறையில் தொடரும் சரிவின் எதிரொலியாக அறிவிக்கப்பட்டிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. மேலும் பண்டிகை காலங்களில் இந்த விலைக்குறைப்பு செய்வதால் வாடிக்கையாளர்களை கவர முடியும் என்றும் மாருதி சுசுகி நம்புகிறது.
அதன்படி பெலினோ கார்களின் விலை தற்போது 7 லட்சத்து 88 ஆயித்து 913 ரூபாயாக இருக்கிறது.
Loading More post
பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு உடல்நலக் குறைவு?
போராடும் விவசாயிகள் அமைதிகாக்க உச்சநீதிமன்றம் வேண்டுகோள்
லிங்கன் முதல் ஜெபர்சன் வரை: அமெரிக்க வரலாற்றில் மறக்க முடியாத 4 பதவியேற்பு விழா!
”சசிகலா விடுதலைக்கு பின்பும் எனது ஆட்சியே” - ஸ்டாலின் கருத்துக்கு முதல்வர் பதிலடி
சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியா? – ஸ்டாலின் பதில்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி