மழலை குரலால் மயக்கும் ஸ்ரீ சிஸ்டர்ஸ் - வீடியோ!

Social-media-viral-singers-SriSisters

அழகிய தமிழ் பாடல்களையும், சமூக சிந்தனையுடன் கூடிய கருத்துப்பாடல்களையும் பாடி நாகை மீனவரின் மகள்கள் இருவர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனர்


Advertisement

இனிய குரல் வளத்துடன் மழலை மாறாமல் பாடும் சகோதரிகள் ஸ்ரீ சிஸ்டர்ஸ் என்று செல்லமாக அழைக்கப்படும் ஸ்ரீ சக்தி, ஸ்ரீமதி சகோதரிகள். இவர்களின் பாடும் திறனை கண்டறிந்த இவர்களின் தந்தை செல்வகுமார், இவர்களுக்கு பாடல்களை பதிவு செய்து காட்டி ஊக்குவித்துள்ளார்.


Advertisement

கேட்டதை அப்படியே பாடும் திறன் கொண்ட இவர்கள், சமூக அக்கறையுள்ள பாடல்கள், பக்திப்பாடல்கள் பாடுகிறார்கள். இதனை சிறுமிகளின் தந்தை பேஸ்புக்கில் பதிவிட, அதன் பிறகு ஸ்ரீ சகோதரிகள் பேஸ்புக் பிரபலங்களாகிவிட்டனர்.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், சிங்கப்பூர்,ஆஸ்திரேலியா,இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருக்கின்ற தமிழர்கள் இந்த வீடியோவைப் பார்த்து செல்வக்குமாரை கைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு தங்களது பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement