பொங்கல் : தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது டிக்கெட் முன் பதிவு

Pongal-rail-tickets-sold-out-in-minutes

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவுகள், தொடங்கிய‌ சில நிமிடங்களிலேயே நிறைவு பெற்றது.


Advertisement

தமிழகத்தின் பண்டிகைகளிலேயே நீண்ட விடுமுறை நாட்களை கொண்டது பொங்கல். போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நீண்ட பண்டிகையாக கொண்டாடப்படும். இந்தப் பண்டிகை கிராமங்களில் தான் சிறப்பாகக் கொண்டாடப்படும் என்பதால் சென்னையில் பணிபுரிபவர்கள் பொங்கலுக்கு ஊர் திரும்புவது வழக்கம். இதனால் சென்னை பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழியும். 


Advertisement

இந்நிலையில் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கியது.

 ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் பயணத்திற்கான முன்பதிவு இன்று தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களிலேயே முன்பதிவு நிறைவடைந்துவிட்டது. இதனால் சென்னை எழும்பூர் ரயில் நிலையங்களில் அதிகாலையிலிருந்தே காத்திருந்த ஏராளமான பயணிகள் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றமடைந்தனர்.


Advertisement

ஜனவரி 11ஆம் தேதிக்கான முன்பதிவு நாளையும், ஜனவரி 12ஆம் தேதிக்கான முன்பதிவு நாளை மறுநாளும் தொடங்குகிறது. ஜனவரி 13ஆம் தேதிக்கான முன்பதிவு 15ஆம் தேதியும், 14ஆம் தேதிக்கான முன்பதிவு 16ஆம் தேதியும் தொடங்குகிறது. 

பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிவிட்டு மீண்டும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்ப வசதியாக ஜனவரி 19ஆம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 21ஆம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 20ஆம் தேதிக்கான முன்பதிவு வரும் 22ஆம் தேதியும் தொடங்கும்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement