வைகோவை விடுதலை செய்த கருணாநிதி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்கிலிருந்து வைகோ விடுதலை செய்யப்பட்டார்.


Advertisement

கடந்த 2006-ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி மதிமுகவை உடைக்க முயற்சிப்பதாக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வைகோ கடிதம் எழுதினார். அதைத்தொடர்ந்து அப்போதைய முதல்வர் சார்பில் வைகோவுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது.


Advertisement

இந்த அவதூறு வழக்கிலிருந்து வைகோவை விடுவிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், வழக்கின் விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள எம்எல்ஏ-க்கள் எம்பி-க்கள் மீதான வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி கருணாநிதி முன்னிலையில் நடைபெற்று வந்தது.

குற்றச்சாட்டு பதிவு, சாட்சிகள் விசாரணை, சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை என அனைத்து நடைமுறைகளும் நிறைவடைந்து, வழக்கின் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில் திமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்கிலிருந்து வைகோவை விடுதலை செய்து நீதிபதி கருணாநிதி உத்தரவிட்டார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement