[X] Close

பூனையா..? அல்லது புலியா..? கின்னஸ் சாதனை

Subscribe
Australian-cat-guinness-records

ஆஸ்திரேலியோவில் உள்ள omar என்ற பூனை ஒன்று உலகின் நீளமான பூனையாக தேர்ந்தெடுக்கப்பட்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.


Advertisement

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் வசித்து வருபவர் ஸ்டீபன் ஹிர்ஸ்ட். இவர் கடந்த வருடம் மைன் கூன் (Maine Coon) வகையை சேர்ந்த ஓமர் (omar) என்ற பூனையை வாங்கி வளர்த்து வருகிறார். ஒரு வயது நிரம்பிய இந்த பூனை 120 சென்டி மீட்டர் நீளமும், 14 கிலோ எடையும் கொண்டுள்ளது. இந்த பூனை மாமிசத்தை மட்டுமே விரும்பி சாப்பிடுகிறது. தற்போது இந்தப் பூனை உலகின் மிக நீளமான பூனையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இந்தப் பூனையின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதை காண்பவர்கள் இது பூனையா, புலியா என்ற கேள்வி எழுப்பாமல் இருப்பது சந்தேகமே!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close