JUST IN

Advertisement

ரிசர்வ் வங்கிக்கு நிதி எப்படி வருகிறது? - பொருளாதாரம் அறிவோம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அரசுக்கு நிதியை அள்ளித் தரும் அட்சய பாத்திரமாக உள்ள ரிசர்வ் வங்கிக்கு நிதி எப்படி வருகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.


Advertisement

நாட்டில் கரன்சியை அச்சிட்டு புழக்கத்தில் விடுவதே ரிசர்வ் வங்கிதான். அதற்கேற்ப கரன்சியை கணிசமான அளவுக்கு ரிசர்வ் வங்கி கையிருப்பு வைத்திருக்கும். அதோடு, டாலர், யென் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகளையும் கணிசமாக கையிருப்பு வைத்திருக்கும். இன்றைய தேதியில் ரிசர்வ் வங்கியிடம் சுமார் 566 டன் தங்கம் இருக்கிறது. அதாவது, 5 லட்சத்து 66 ஆயிரம் கிலோ தங்கம் இருக்கிறது. அதன் இன்றைய சர்வதேச மதிப்பும் ரிசர்வ் வங்கியின் நிதி இருப்பில் கணக்கில் கொள்ளப்படுகிறது.


Advertisement

கரன்சி கையிருப்பு மற்றும் தங்கம் ஆகியவை மட்டுமே ரிசர்வ் வங்கியின் சொத்துகளில் 77 சதவிகித பங்கு வகிக்கின்றன. அதில் கரன்சி கையிருப்பின் பங்கு 26 சதவிகிதம், தங்கம் 51 சதவிகிதம். மீதமுள்ள சொத்து என்பது வங்கிகள் செலுத்தும் வட்டி மற்றும் பல்வேறு கட்டணங்கள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் கட்டும் கமிஷன், உரிமத் தொகை போன்றவை மூலம் கிடைக்கிறது.

2017-18ஆம் நிதியாண்டில் ரிசர்வ் வங்கியிடம் கரன்சி மற்றும் தங்க கையிருப்பு 6 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. வெளிநாட்டு கரன்சியின் மதிப்பு உயரும்போது ரிசர்வ் வங்கியிடம் உள்ள கரன்சி கையிருப்பின் மதிப்பு மாறும். இப்போது ரூபாய் மதிப்பு சரிவால், வெளிநாட்டு கரன்சிகளின் மதிப்பு உயர்ந்து, ரிசர்வ் வங்கியின் சொத்து மதிப்பும் அதிகரித்திருக்கிறது.


Advertisement

நெருக்கடி கால நிதியாக சொத்து மதிப்பில் 26 சதவிகிதம், அதாவது 2 லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாயை 2017-18 நிதியாண்டில் ரிசர்வ் வங்கி பராமரித்தது. இதே அளவு இப்போதும் தொடர்கிறது. 2013-14ஆம் ஆண்டில் 2 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், இப்போது சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் நெருக்கடி நிதி உயர்ந்திருக்கிறது. கரன்சி மற்றும் தங்கம் கையிருப்பு 2013-14ல் 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2015-16ல் அது 6 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்தது. 2017-18ஆம் ஆண்டில் அது 6 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்தது.

ரிசர்வ் வங்கிக்கு வங்கிகள் செலுத்தும் வட்டி, கட்டணங்கள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் உரிமக் கட்டணம், மற்ற கட்டணங்கள் மூலம் ஆண்டுதோறும் வருவாய் கிடைக்கிறது. ஆனால், வருவாய்க்கு ரிசர்வ் வங்கி வருமான வரி செலுத்தத் தேவையில்லை என்பதால், தனது செலவுகள் போக மீத வருவாயை உபரி நிதியாகக் கருதி மத்திய அரசுக்கு வழங்குவது ரிசர்வ் வங்கியின் வழக்கம். அதன்படி, இதுவரை இல்லாத அளவாக ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி வழங்க முன்வந்துள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement