மிக்-21 பைசான் ரக விமானத்தில் பறக்கபோகும் விங் கமாண்டர் அபிநந்தன் ?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வரும் செப்டம்பர் மாதம் விங் கமாண்டர் அபிநந்தன் விமானப்படை தளபதியுடன் மிக்-21 பைசன் ரக விமானத்தில் பறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Advertisement

கடந்த பிப்ரவரி மாதம் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் விமானத்தை விங் கமாண்டர் அபிநந்தன் தகர்த்தார். அவரது விமானம் சுடப்பட்டதையடுத்து பாராசூட் மூலம் தப்பித்தபோது துரதிருஷ்டவசமாக பாகிஸ்தான் வசம் சிக்கினார். இதன்பின்னர் அவரை பாகிஸ்தான் அரசு இந்தியாவிடம் ஒப்படைத்தது. 


Advertisement

இதனைத் தொடர்ந்து நாடு திரும்பிய அபிநந்தன் காயத்திலிருந்து குணமடைய சிகிச்சை பெற்று வந்தார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இவர் மீண்டும் விமானத்தை இயக்குவதற்கு விமானப்படை ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து இவர் தற்போது ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள விமானப்படையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு சுதந்திர தினத்தன்று வீர் சக்ரா விருது அளிக்கப்பட்டது. 

இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி விமானப்படையில் Apache விமானத்தின் இணைப்பு விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் விமானப்படையின் தளபதி பிஎஸ் தனோவாவுடன் விங் கமாண்டர் அபிநந்தனும் மிக்-21 பைசன் ரக விமானத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிக்-21 பைசான் ரக விமானத்தை ஏற்கெனவே பல முறை விமானப்படை தளபதி பிஎஸ் தனோவா இயக்கியுள்ளார். இம்முறை அவர் மீண்டும் அபிநந்தன் உடன் இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement