உத்தரபிரதேசத்தில் அரசு மருத்துவமனையில், 17 வயது இளம்பெண் ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் உள்ளது அரசு டிபி மருத்துவமனை. 17 வயது பெண் ஒருவர் இங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 23 ஆம் தேதி இரவு இங்கு வந்த, வார்ட் பாய் சிவானந்தன், ‘ஊசி போட வேண்டும். கீழே உள்ள அறைக்கு வாருங்கள்’ என்று அந்தப் பெண்ணை அழைத்துள்ளார். அவர், அம்மாவையும் அழைத்து வருகிறேன் என்றதும், ‘அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம்’ என்று கூறிவிட்டு கீழே உள்ள அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மாத்திரை ஒன்றை கொடுத்தார். அதைத் தின்றதும் மயக்கமானார், அந்தப் பெண்.
பின்னர் சிவானந்தனும் மருத்துவமனையில் பணியாற்றும் விஷால் என்பவரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். மயக்கம் தெளிந்ததும் இதுபற்றி தன் தாயிடம் சொன்னார் அந்தப் பெண். பின்னர் அவர் போலீசில் புகார் செய்தார். இந்தப் புகா ரை அடுத்து ஊழியர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரசு மருத்துவ மனைக்குள்ளேயே இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
நீடிக்கும் தொகுதிப் பங்கீடு இழுபறி... விசிகவுக்கு தனிச் சின்னமா? திமுக சின்னமா?
பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதால் சிறு கட்சிகளுக்கு ஏற்படும் சாதக பாதகம் என்ன? ஓர் அலசல்
'கோவாக்சின் 81% செயல்திறன் கொண்டது..' ஆய்வு முடிவுகளை வெளியிட்ட பாரத் பயோடெக்
பெட்ரோல், டீசல் வரியை லிட்டருக்கு ரூ. 8.50 வரை தாராளாமாக குறைக்கலாம்: நிபுணர்கள் கருத்து
அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் இன்று தொடக்கம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?