’பிரச்னைகளை தீர்க்கவில்லை என்றால் உதைக்கச் சொல்வேன்’: நிதின் கட்கரி எச்சரிக்கை!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

’பிரச்னைகளை தீர்க்கவில்லை என்றால் மக்களை கொண்டு உதைக்கச் சொல்வேன்’ என்று அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எச்சரிக்கை விடுத்துப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஏற்பாடு செய்திருந்த தொழில் முனைவோர் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். 

அப்போது அவர் , ‘’ஏன் இந்த அதிகாரிகள் ஆய்வு என்ற பெயரில் லஞ்சம் வாங்குகிறார்கள்? நான் அவர்களின் முகத்துக்கு நேராகச் சொல்கிறேன். நீங்கள் அரசு ஊழியர்கள், நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன். நான் அவர்களுக்குப் பதில் செல்ல வேண்டும். நீங்கள் திருட்டுச் செயலில் ஈடுபட்டால், உங்களைத் திருடன் என்றுதான் சொல்வேன். வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினேன்.


Advertisement

போக்குவரத்து கமிஷனரும் கலந்துகொண்டார். அவர்களிடம், எந்த பிரச்னையையும் 8 நாட்களுக்குள் தீர்க்க வேண்டும், இல்லை என்றால் சட்டத்தை கையில் எடுத்து உதையுங்கள் என்று மக்களிடம் சொல்வேன் என்று கூறினேன். நீதி கிடைக்காத எந்த அமைப்பையும் தூக்கி எறிய வேண்டும் என எனது ஆசிரியர் கள் கற்றுக்கொடுத்துள்ளனர்’’ என்றார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் இந்தப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement