ஹாங்காங்கை ஒட்டிய எல்லையில் படைகளை சீனா குவித்து வருவதை உளவுத்துறை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் அரசை எதிர்த்து கடந்த சில மாதங்களாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹாங்காங் குற்றவாளிகளை சீனாவுக்கு அழைத்து செல்லும் அரசின் முடிவை எதிர்த்து மக்களின் போராட்டம் தொடங்கியது. இதனை அடுத்து அரசு இந்த முடிவை திரும்ப பெற்றது. எனினும் ஹாங்காங் நிர்வாக ஆட்சியாளர் கேரிலாம் பதவி விலக கோரி போராட்டங்கள் நீடிக்கின்றன.
இந்தச் சூழலில் ஹாங்காங்கை ஒட்டிய எல்லைப்பகுதியில் சீனா படைகளை குவித்து வருவதை உளவுத்துறை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் ட்ரம்ப் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
10 வாரங்களுக்கு மேலாக ஹாங்காங்கில் போராட்டம் நீடிக்கிறது. போராட்டத்தை ஒடுக்க சீனா தனது படைகளை பயன்படுத்தும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் ட்ரம்ப் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Loading More post
சசிகலா உடல்நிலையில் முன்னேற்றம் - சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி: போராட்டக்களத்தில் தொடரும் வகுப்புகள்!
"எங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடாதீர்கள்" - அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?