’ வாழ்க்கையை சீரழித்தார் அப்பா’: தற்கொலைக்கு முன் வந்த மாணவியின் வாட்ஸ்அப்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தங்களின் தற்கொலைக்கு தந்தைதான் காரணம் என்று வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பிவிட்டு தாய் மற்றும் தங்கையுடன் மாணவி தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

பெங்களூரைச் சேர்ந்தவர், சித்தய்யா (48). மின் வாரியத்தில் வேலை செய்து வருகிறார். இவர் மனைவி ராஜேஸ்வரி (40). இவர்களுக்கு மானசா(17), பூமிகா(15) என்ற 2 மகள்கள். மானசா பனிரெண்டாம் வகுப்பும் பூமிகா 10 வகுப்பும் படித்து வந்தனர். நேற்று முன்தினம், தனது மாமா புட்டசாமிக்கு மானசா, ஒரு வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பியிருந்தார். அதைப் பார்த்தவருக்கு அதிர்ச்சி.


Advertisement

 ‘’ஒவ்வொருவருக்கும் நல்ல அப்பா கிடைக்கவேண்டும். அப்படி கிடைத்தவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். ஆனால், என் அப்பா எங்கள் வாழ்க்கையை சீரழித்துவிட்டார். எங்கள் சாவுக்கு அவர்தான் காரணம்’’ என்று அந்த மெசேஜில் இருந்தது.

படித்த அவர், பதறியடித்துக் கொண்டு சகோதரி வீட்டுக்குச் சென்றார். வீடு உள்பக்கமாகத் தாழிடப்பட்டிருந்தது. உடைத்துக் கொண்டு சென்றார். அங்கு தூக்கில் தொங்கிய நிலையில், தனது சகோதரி, மருமகள்களைக் கண்டதும் கதறினார்.  உடனடி யாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்துவந்து உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தற்கொலைக்கு சித்தய்யா வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததுதான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த தொடர்பு காரணமாக குடும்பத்தை அவர் கண்டுகொள்ளாமல் இருந்தாராம். அந்தத் தொடர்பை கைவிடும்படி சித்தய்யாவிடம் கூறி வந்திருக்கிறார் ராஜேஷ்வரி. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையே, இரண்டு நாட்களுக்கு முன் சித்தய்யா, தமிழகம் சென்றுவிட்டார். வீட்டில் தனியாக இருந்த ராஜேஸ்வரி தனது மகள்களுடன் தற்கொ லை செய்து கொண்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement