அம்மா உணவக பணியாளர்களிடம் பணம் வசூல் - வால்பாறை சர்ச்சை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வால்பாறை அம்மா உணவத்தில் வேலை செய்யும் பணியாளர்களிடம் இருந்து பணம் வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.


Advertisement

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அம்மா உணவகம் கடந்த 2014-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதில் பெண்கள் 12 பேர் வேலை செய்கின்றனர்.   இவர்களுக்கு மாதம் 7000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. மாதம் இவர்களுக்கு விடுமுறை இல்லை. விடுமுறை எடுத்தால் இவர்கள் சம்பளத்தில் அதற்கான தொகை கழிக்கப்படும்.

அம்மா உணவகத்தில் இட்லி ஒரு ரூபாய்க்கும் சாம்பார் சாதம் 5 ரூபாய் மற்றும் தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே ஒரு நாளைக்கு மொத்தம் 2,880 ரூபாய்க்கு அம்மா உணவகத்தில் விற்பனை செய்ய வேண்டும் என்றும் ஒரு இலக்கு கொடுக்கப்பட்டுள்ளது.


Advertisement

வால்பாறையை பொறுத்தமட்டில் மக்கள் தொகை குறைவாக உள்ளனர். எனவே இங்கு 2,880 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியாது. நகராட்சி நிர்வாகம் தினம் தோறும் 2,880 தர வேண்டும் என்றும் குறைவாக விற்பனை செய்தால் பணியாளர்களிடம் இருந்து அதற்கான பணத்தையும் பிடித்தம் செய்கிறது. ஒரு பணியாளர்களிடம் ஒரு நாளைக்கு 100 முதல் 200 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. இதனால் அம்மா உணவகத்தில் வேலை  செய்யும் பெண்கள் அதிக சிரமத்தை சந்திக்க நேரிடுகிறது.

எனவே அம்மா உணவகத்தில் வேலை செய்பவர்களுக்கு அரசு நிர்ணயித்து உள்ள தொகையை வழங்கிடவும், கட்டாயப்படுத்தி வசூல் செய்ய வேண்டாம் எனவும் பணியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூ., மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement