குழந்தையை கடத்த வந்ததாக தாக்குதல்: மனநலம் குன்றிய பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சேலத்தில் குழந்தை கடத்த வந்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவரை பொதுமக்கள் தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். 


Advertisement

சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன் கோயில் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக சுற்றித்திரிந்த பெண், ஒரு கடையில் சாக்லேட்டுகளை வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் அந்தப்பெண்ணை பிடித்து தாக்கினர். 

தகவல் அறிந்து வந்த அம்மாபேட்டை காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணை மீட்டனர். மனநிலை பாதிக்கப்பட்டது போல் தோற்றமளிக்கும் பெண்ணை, முழுவிரம் அறியாமல் தாக்கியதற்கு அப்பகுதி மக்கள் சிலர் அதிருப்தி தெரிவித்தனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement