அதிமுகவிற்கு மக்கள் ஏன் வாக்களிக்கவில்லை என புரியவில்லை - பன்னீர்செல்வம் 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அதிமுகவிற்கு மக்கள் ஏன் வாக்களிக்கவில்லை என புரியவில்லை என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 


Advertisement

வேலூர் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர்கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதனால் அங்கு பரப்புரை சூடுபிடித்துள்ளது. 


Advertisement

வேலூர் தொகுதியில் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “ஏ.சி.சண்முகம் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து அதிமுகவிற்கு பணியாற்றிவர். அவரை வெற்றி பெற வைக்க வேண்டும். கருணாநிதி ஆட்சியில் காவிரி தண்ணீரை பெற்றுத்தர முடியவில்லை. ஸ்டாலின் பல சூழ்ச்சிகள் செய்தாலும் அவரால் முதல்வராக முடியாது. அதிமுக ஆட்சியில் அடிமட்ட தொண்டன் முதல்வராக முடியும். திமுகவில் அது முடியுமா? மக்களை பாதிக்கும் எந்த திட்டங்களையும் அதிமுக அரசு அனுமதிக்காது. இருந்தாலும் அதிமுகவிற்கு மக்கள் ஏன் வாக்களிக்கவில்லை என புரியவில்லை.” எனத் தெரிவித்தார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement