JUST IN

“கனிமொழி வெளிநாட்டு சொத்துகளை குறிப்பிடவில்லை” - தமிழிசை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு பாஜக காரணமல்ல என்று அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூரில் தமிழக அளவிலான பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழிசை செளந்தரராஜன், உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு பாஜக காரணமில்லை என்றும், காங்கிரஸ் கட்சியே காரணம் என்றும் தெரிவித்தார். 

10% இட ஒதுக்கீடு நலிந்தர்களுக்கானது என்றும், மற்ற பிரிவினர் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் கூறினார். தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் கனிமொழி வெளிநாட்டு சொத்து விபரங்களை குறிப்பிடவில்லை என்பதால், அவரது வெற்றியை எதிர்த்து வழக்குப் போட்டுள்ளதாக தெரிவித்தார். திமுகவினர் காரண காரியங்களுக்கும், வியாபாரத்திற்கும் பிற மொழியை கற்றுக்கொண்டு, அரசியலுக்கு மட்டும் தமிழை பயன்படுத்துகின்றனர் என்றும் தமிழிசை குற்றம்சாட்டினார்.

Advertisement: