செல்போனுக்காக இளைஞரைத் தாக்கி தண்டவாளத்தில் வீசிய 3பேர் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தருமபுரி அருகே ரயில் தண்டவாளத்தில் மர்மமாக இளைஞர் உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.


Advertisement

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த சிவாடி ரயில் நிலையத்துக்கும் தருமபுரி ரயில் நிலையத்துக்கும் இடையே கடந்த மாதம் 25-ம் தேதி இளைஞர் ஒருவர் ரயில் பாதையில் உயிரிழந்து கிடந்தார். தருமபுரி ரயில்வே போலீஸார் விசாரணையில், காரிமங்கலம் வட்டம் மல்லிக்குட்டை அடுத்த நிம்மாங்கரை கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சசிக்குமார் என தெரிய வந்தது. உயிரிழந்தவர் வைத்திருந்த லேப்டாப், செல்போன் ஆகியவை காணாமல் போயிருந்ததால் உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார் அளித்தனர்.


Advertisement

இதனையடுத்து சசிகுமார் இறப்பு தொடர்பாக இரயில்வே போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சசிக்குமார் பயன்படுத்தி வந்த செல்போன் ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் பயன்படுத்தப்படுவது தெரிய வந்தது. தொடர் விசாரணையில், விஜய் ராமசாமி(23) என்பவரிடம் அந்த செல்போன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவரை பிடித்து போலீஸார் விசாராணை நடத்தினர். 

விசாரணையில் ''கடந்த மாதம் 24-ம் தேதி ஓசூர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஆஜரான விஜய் ராமசாமி தருமபுரியில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர், உறவினர்களான சசி, கார்த்திக் ஆகியோருடன் இணைந்து யாரையாவது ஏமாற்றி பணம் பறிக்க திட்டமிட்டுள்ளார். அப்போது சசிக்குமாரிடம் பேச்சு கொடுத்து அவரை தனியே அழைத்துச்சென்ற விஜய் ராமசாமி அவரை தாக்கி லேப்டாப், செல்போனை பறித்துள்ளார். பின்னர் மயக்கமடைந்த சசிக்குமாரை தண்டாவளத்தில் படுக்கவைத்துவிட்டு ரயில் வரும் வரை காத்திருந்துள்ளனர். ரயில் கடந்து சென்றவுடன் சசிக்குமார் உயிரிழந்ததை உறுதி செய்த விஜய் ராமசாமி லேப்டாப், செல்போனை திருடிசென்றுள்ளார்.


Advertisement

இதனையடுத்து விஜய் ராமசாமி, சசி, கார்த்திக் ஆகியோரை கைது செய்த போலீசார்  தருமபுரி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement