மத்திய அரசைப் போலவே அதிமுக அரசும் தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்க முயற்சிப்பதாக மக்களவை உறுப்பினர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
புதிய அரசுப் பேருந்துகளில், ஆங்கிலம் மற்றும் இந்தியில் தகவல்கள் இடம்பெற்றிருப்பதாக கூறி சில படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் கனிமொழி பதிவிட்டுள்ளார். மேலும் அந்தப் பதிவில், “தமிழக மக்களின் வரி பணத்தில் புதிதாக வாங்கியிருக்கும் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை. மத்திய அரசின் இந்தி திணிப்பு ஒருபுறம் என்றால், நாங்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று இந்தியை திணிக்கும் அதிமுக அரசுக்கு கடும் கண்டனம்.” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களின் வரி பணத்தில் புதிதாக வாங்கியிருக்கும் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை.மத்திய அரசின் இந்தி திணிப்பு ஒருபுறம் என்றால்,நாங்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று இந்தியை திணிக்கும் அதிமுக அரசுக்கு கடும் கண்டனம்.#stopHindiImposition pic.twitter.com/SqAQfEJI6N — Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) July 7, 2019
முன்னதாக மும்மொழிக் கொள்ளை மூலம் மத்திய அரசு இந்தியை திணிக்க முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது அதிமுக அரசும் ஹிந்தியை திணிக்க முயற்சிப்பதாக கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
Loading More post
திருச்சி: மழைநீரில் மூழ்கி 50,000 ஏக்கர் நெற்பயிர் நாசம்; இழப்பீடு வழங்க கோரிக்கை
’’நான் நிச்சயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன்’’ - முதல்வர் பழனிசாமி
கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் - ஏற்புப் படிவத்தில் கோவாக்சின் குறித்து இருப்பது என்ன?
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு