கர்ணன் எங்கே?: திணறும் காவல்துறை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நீதிபதி கர்ணனை தேடி ஆந்திரா சென்ற கொல்கத்தா போலீஸார் சென்னை திரும்பியது.


Advertisement

உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நீதிபதி கர்ணனை கைது செய்ய கொல்கத்தா காவல் துறையினர் ஆந்திரா விரைந்தனர். கர்ணனின் செல்போன் சிக்னல்களை வைத்து அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். செல்போன் சிக்னல் ஆந்திராவின் தடா அருகே இருந்தது தெரிய வந்ததை அடுத்து அப்பகுதிக்கு போலீசார் விரைந்தனர். அங்கு அவர் இல்லாததால் ஏமாற்றமடைந்த காவல்துறையினர் பின்னர் ஆந்திர போலீசாருடன் ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து கொல்கத்தா போலீசார் சென்னை திரும்பினர். முன்னதாக சென்னை அரும்பாக்கத்தில் அவர் தங்கியிருக்கலாம் என்ற தகவலின்பேரிலும் சோதனை நடைபெற்றது.

சக நீதிபதிகள் தன்னிடம் காழ்ப்புணர்ச்சியுடன் நடப்பதாக கூறி வந்த நீதிபதி கர்ணன், 2015ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட சக நீதிபதிகள் சிலர் மீது ஊழல் புகார் தெரிவித்தார். இதையடுத்து, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவான நிலையில், நேரில் ஆஜராகியும் குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். இதையடுத்து, அவருக்கு மனநல பரிசோதனை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோது, உச்ச நீதிமன்றத்தின் 8 நீதிபதிகளுக்கு மனநல சோதனை நடத்த கர்ணன் உத்தரவிட்டார். இந்த மோதலின் உச்சக் கட்டமாக, நீதித்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் பதவியில் இருக்கும் நீதிபதி ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement