“பொதுமக்களை கண்ணியமாக நடத்துங்கள்” - காவலர்களுக்கு கமிஷனர் விஸ்வநாதன் அறிவுரை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

காவலர்கள் பொதுமக்களிடம் கண்ணியமாக மதித்து நடத்தல் வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் காவலர் பயிற்சி நிறைவு விழாவில் அறிவுறுத்தியுள்ளார்.


Advertisement

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளிகளில் சுமார் 5,205 பயிற்சி காவலர்கள் பயிற்சி பெற்று வந்தனர். அதில் சென்னை புனித தோமையர் மலை தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் 220 பயிற்சி காவலர்கள் பயிற்சி பெற்றனர். அவர்களின் மாத அடிப்படை பயிற்சி  நிறைவு பெற்றதையொட்டி பயிற்சி நிறைவு விழா சென்னை பரங்கிமலை ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் கலந்து கொண்டார். 


Advertisement

அப்போது பயிற்சி பெற்ற காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று பயிற்சியில் வெற்றி பெற்ற பயிற்சி காவலர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கி கவுரவித்தார். அதன் பின்னர் ஆணையர் விஸ்வநாதன் காவலர்களிடையே பேசுகையில், "பயிற்சி முடித்த அனைத்து காவலர்களுக்கும் எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். 7 மாதங்களுக்கு முன்பு இளைஞராக வந்து, காவல்துறை அதிகாரியாக மேம்பட்டுள்ளீர்கள். நீங்கள் சட்டத்தை மதித்து நடத்தல் வேண்டும். கட்டாயம் ஹெல்மெட் அணிவது உள்பட அனைவரும் சட்டத்தை மதித்து நடத்தல் வேண்டும். 

மேலும் பொதுமக்களிடம் எந்த காலகட்டத்திலும் கனிவாக பேச வேண்டும். அவர்களிடம் கடிந்து பேசக்கூடாது. அனைவரையும் மதித்து நடத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்களிடம் சரியான முறையில் உதவ வேண்டும். காவலர்களுக்கு பொறுமை மிகவும் முக்கியம். பொதுமக்களிடம் கண்ணியமாக நடத்தல் வேண்டும். 


Advertisement

பொறுமையும் நன்னடைத்தையும் இருக்க வேண்டும். சேவை செய்வது என்பது இன்றியமையாதது. காவல்துறை பணி என்பது மற்றவர்களுக்கு சேவை செய்யும் பணி. அற்காக தான் சம்பளம். காவலர்களாக தேர்வு பெற்ற உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்" என்று  பேசினார். மேலும் இந்த விழாவில் காவல்துறை ஆணையர்களும் உயர் அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.
 

loading...

Advertisement

Advertisement

Advertisement