ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை மேலும் எளிமையாக மாற்றப்படும் என பட்ஜெட் அறிவிப்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் பல புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். ஜிஎஸ்டி தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்ட அவர், “ஒரே நாடு ஒரே வரி, ஒரே மார்க்கெட் என்ற இலக்கை அடைய ஜிஎஸ்டி கவுன்சிலின் பங்கு மிகவும் முக்கியமானது. அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். ஜிஎஸ்டி வழியில் ஏற்கெனவே வருடத்துக்கு 92 ஆயிரம் கோடி ரூபாய் வரை சலுகை அளிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை மேலும் எளிமையாக்கப்படும்” என்று தெரிவித்தார்.
அத்துடன், “தங்கம் இறக்குமதி மீதான வரி 10% லிருந்து 12.5% ஆக உயர்த்தப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை குறைந்து கொண்டிருப்பதால், பெட்ரோல் டீசலுக்கு கலால் வரி லிட்டருக்கு ஒரு ரூபாய் அதிகரிக்கப்படுகிறது. சிசிடிவி கேமரா இறக்குமதி வரியில் மாற்றம் செய்யப்படும். பாமாயிலுக்கு அளிக்கப்பட்டு வந்த இறக்குமதி வரி சலுகையை ரத்து செய்யப்படுகிறது” என்று தெரிவித்தார்.
Loading More post
"வாக்குகள் சிதறாது; உண்மையான தர்மயுத்தம் இப்போதுதான் தொடக்கம்" - டிடிவி தினகரன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு; கையெழுத்தானது ஒப்பந்தம்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு; இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
”சீட் குறைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியின் தவறுதான் காரணம்” - ப.சிதம்பரம்
இறுதியாகும் பேச்சுவார்த்தை... ஐபிஎல் அட்டவணை வெளியீடு... இன்னும் சில முக்கியச் செய்திகள்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!