காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராகிறார் மோதிலால் வோரா? 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

காங்கிரஸ் கட்சியின் தலைவராக மோதிலால் வோரா நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Advertisement

90 வயதான மோதிலால் வோரா இடைக்காலத் தலைவராக நியமிக்க நடவடிக்கைளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர் காங்கிரஸ் கட்சியில் பொருளாளராக இருந்தார். பின்னர் வயது மூப்பு காரணமாக பொருளாளர் பதவியை அகமத் படேலிடம் கொடுத்துவிட்டு ஓய்வு பெறும் நிலையில் இருந்தார். இவர் காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த தலைவராக திகழ்கிறார். மத்திய பிரதேச முதலமைச்சராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார். உத்திரபிரதேச ஆளுநர், மத்திய அமைச்சர் போன்ற பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். தற்போது மாநிலங்களவை எம்.பியாக உள்ளார். 


Advertisement

இந்நிலையில் மோதிலால் வோரா இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டு அவரையே புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வைக்கலாம் என காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. 

முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் தலைவராக கடந்த 2017ம் ஆண்டு பொறுப்பேற்ற ராகுல் காந்தி, அண்மையில் நடந்த மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கடந்த மே 25ம் தேதி நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அப்போது முதல் ராகுல் தனது முடிவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி, கட்சியின் மூத்தத் தலைவர்களும், தொண்டர்களும் வலியுறுத்தி வருகின்றனர். எனினும் ராகுல் தனது முடிவில் தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகிறார்.


Advertisement

இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, தாமதம் இல்லாமல், புதிய தலைவரை கட்சி தேர்வு செய்ய வேண்டும் என தெரிவித்தார். ஏற்கெனவே தாம் ராஜினாமா கடிதத்தை வழங்கிவிட்டதால், தா‌ம் தலைவர் பொறுப்பில் நீண்ட நாட்களுக்கு நீடிக்க முடியாது என்றும் ராகுல் கூறினார். மேலும், புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் நடைமுறையில் தாம் பங்கேற்கப் போவதில்லை என்றும், எனவே காங்கிரஸ் காரிய கமிட்டி இந்த விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement