குழந்தை பெற்ற பெண்ணுக்கு தவறான ரத்த வகையை ஏற்றியதால், அப்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அக்தர் பானோ (வயது 32). நிறைமாத கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக அனந்தபூர் அரசாங்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிசேரியன் மூலம் அழகான பெண் குழந்தை பிறந்தது. தாய்- சேய் இருவரும் ஆரோக்கியமாக இருந்துள்ளனர். ஆனால் அடுத்த நாள் பானோவின் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதாகக் கூறி ரத்தம் ஏற்ற வேண்டும் எனக் கூறியிருக்கின்றனர். அதன்படி ரத்தமும் ஏற்றப்பட்டிருக்கிறது. ஆனால் வெறும் 100 மிலி ரத்தம் ஏற்றப்பட்டவுடனேயே பானோ, விபரீத நிலைக்கு சென்றுள்ளார். தொடர்ந்து ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். மறுநாள் மருத்துவர்கள் பானோவின் கணவரிடம், பானோ நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
“அருகாமையில் எங்கு டாய்லெட் இருக்கு”- புதிய செயலியை உருவாக்கியது கேரளா
ஆனால் பானோவின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சத்யநாராயணா சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைக்கு உத்தரவிட்டார். அந்த விசாரணையில் பானோவிற்கு O + ரத்த வகை இருந்ததும், ஆனால் மருத்துவர்கள் அலட்சியம் காரணமாக அவருக்கு B + ரத்தத்தை ஏற்றியதும் தெரியவந்தது. இதனாலேயே பானோ உயிரிழந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அஜாக்கிரதை காரணமாக அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டதோடு, அதனை மறைக்கவும் செய்துள்ளனர்.
இதனையடுத்து ரத்த வங்கியின் மேற்பார்வையாளர் ஷிவ குமார், மகப்பேறு மருத்துவர் ஆய்வக உதவியாளர், செவிலியர் என பலர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் மருத்துவமனைக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Loading More post
PTExclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும் தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
ஜெயலலிதா நினைவு இல்லம் ஜன.28ல் திறப்பு - தமிழக அரசு
9 நாட்களில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
டிராக்டர் பேரணி: ட்விட்டர் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி - உளவுத்துறை
சூடு பிடிக்கும் அரசியல்களம்; அடுத்தக்கட்டத்தில் விவசாயிகள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்
PTExclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும் தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?