உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடந்த போட்டியில், நியூசிலாந்து அணியை ஆஸ்திரேலியா வீழ்த்தியது.
உலகக் கோப்பை தொடரில் நேற்று நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதின. லாட்ஸ் மைதானத் தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
நியூசிலாந்து வீரர்களின் துல்லியமான பந்துவீச்சால், வார்னர் 16, ஆரோன் பின்ச் 8, ஸ்மித் 5, ஸ்டொய்னிஸ் 21, மேக்ஸ்வெல் 0 என ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், அந்த அணி 92 ரன்களுக்குள் 5 விக்கெட்டை இழந்து தடுமாறியது.
சரிந்த அணியை உஸ்மான் கவாஜா, விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஜோடி மீட்டது. இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். கேரி அதிரடியாக விளையாடி 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதிவரை போராடிய கவாஜா 50வது ஓவரில் 88 ரன்களுக்கு அவுட் ஆனார்.
அவரது விக்கெட்டை தொடர்ந்து அடுத்த இரண்டு பந்துகளில் ஸ்டார்க், பேரண்ட்ராப் ஆகிய இருவரை அடுத்தடுத்து வெளி யேற்றி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார் நியூசிலாந்தின் போல்ட். இதன் மூலம் இந்த உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது வீரராக ஹாட்ரிக் விக்கெட் எடுத்துள்ளார்.
இதற்கு முன் இந்தியாவின் ஷமி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியிருந்தார். நியூசிலாந்து வீரர் ஒருவர் இச்சாதனையை நிகழ்த்துவது இதுவே முதல் முறை.
ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் போல்ட் 4 விக்கெட் சாய்த்தார். பெர்குசன், நீசம் தலா இரண்டு விக்கெட் சாய்த்தனர்.
பின்னர் 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் கேப்டன் வில்லியம்சனை (40 ரன்) தவிர வேறு யாரும் நிலைத்து நிற்கவில்லை. தொடக்க ஆட்டக்காரர் மார்டின் குப்தில் 20, அனுபவ வீரர் ராஸ் டெய்லர் 30, லாதம் 12 ரன்களில் வெளியேற, அந்த அணி 43.4 ஓவரில் 157 ரன்னுக்கு சுருண்டது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி 86 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய தரப்பில், அபாரமாக பந்துவீசிய ஸ்டார்க், 5 விக்கெட்டுகளை சாய்த்தார். பேரண்ட்ராப் 2 விக்கெட்டும், கம்மின் ஸ், லியான், ஸ்மித், தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
Loading More post
அதிகரிக்கும் கொரோனா: 10 மாநிலங்களில் உயர்மட்ட குழுக்களை களமிறக்க மத்திய அரசு திட்டம்!
இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு ஒப்புதல்
இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 879 பேர் பலி
தஞ்சை: கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு? 2வது டோஸ் போடவந்தவர்களை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்!
"கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகலாம்" - உலக சுகாதார அமைப்பு கணிப்பு
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!