நான்கு வயது குழந்தைக்கு சொந்த வீட்டிலேயே நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமை ! பக்கெட்டில் கிடந்த சடலம்

4-Years-Child-rape-and-killed-near-chennai

சென்னையில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டிருக்கும் கொடூர சம்பவம் அனைவரது நெஞ்சையும் பதற வைத்துள்ளது.


Advertisement

சென்னை ஆவடி அருகே தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் நபர், தனது மனைவி, பள்ளி செல்லும் 7 வயது மகன் மற்றும் 4 வயது மகளுடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த தாய் நேற்று மாலை, 2ஆம் வகுப்பு படிக்கும் தனது மகனை டியூஷனுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் தனது 4 வயது மகளை வீட்டில் தனியாக விட்டுவிட்டு சென்றுள்ளார். பின்னர் மகனை டியூஷனில் விட்டுவிட்டு வீடு திரும்பியபோது தனது மகள் வீட்டில் இல்லாததால் அதிர்ச்சியடைந்தார். 

Image result for சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை


Advertisement

இதனையடுத்து அந்த தாய் தனது மகளை வீடு முழுக்க தேடியுள்ளார், ஆனால் வீட்டில் எங்கே தேடியும் அந்த சிறுமி கிடைக்கவில்லை. உடனடியாக அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த போது அந்த 4 வயது சிறுமி வீட்டின் கழிவறையில் உள்ள வாலியில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்து அந்த தாய் கதறி அழுதார். அதனை பார்ப்பவர்கள் நெஞ்சை பதற வைத்தது. அப்போது அந்த சிறுமி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. 

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அச்சிறுமியின் சடலைத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்தில் சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமாரி, அம்பத்தூர் துணை ஆணையர் ஈஸ்வரன் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அருகே வசித்து வரும் அச்சிறுமியின் உறவினரான ஓய்வுப் பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் மீது சந்தேகம் எழுந்தது. அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் மீனாட்சி சுந்தரம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதனை அடுத்து மீனாட்சி சுந்தரத்தை கைது செய்த காவல்துறையினர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த சம்பவம் அப்பகுதி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement